நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் http://www.drbramnad.net என்ற இணைய தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் இப்பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளமான www.drbramnad.netல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும், உதவி மைய தொலைபேசி எண்:. 04567 230950 என்ற எண்ணிலும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் விற்பனையாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வருகிற 14.11.2022 ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமார் தெரிவித்தார்