ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை உற்பத்தியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர் பயிற்சி பெற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
திறன் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர் பயிற்சி ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
விண்ணப்பம்
இப்பயிற்சி 20 இளைஞர்களுக்கு 30 நாட்கள் வழங்கப்படும். இதில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது பயணப்படி வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர், தங்களது 2 பாஸ் போர்ட் புகைப்படம், கல்வித் தகுதிக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன், அப்பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
தொடர்புக்கு
மேலும் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர் கண்ணையாவை 8248980944 என்ற மொபைல் போன் எண்ணிலும், பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சீதாலெட்சுமியை 9788492372 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.