ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற கால்நடை உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் செயல் கூட்டம் நடைபெற்றது.
கால்நடைகளின் முக்கியத்துவம்
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் முக்கியமானது ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் முக்கியமானது. கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக.எனவே, பசுந்தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துபடும்.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2023-24) அரசு மானியத்துடன் கூடிய கீழக்கண்ட தீவன செயல்படுத்தப்படவுள்ளது.
பயிர் சாகுபடி திட்டங்கள்
அ) வேளாண்மைத்துறை இணை இயக்குநருடன் கலந்தாலோசித்து தோட்டம்/பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 20 ஏக்கர் குறியீடு பெறப்பட்டுள்ளது.
ஆ) கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் 0.25 ஏக்கர் அதிக பட்சம் 1 ஏக்கர் பரப்பில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.
இ) பசுந்தீவனங்கள் வீணாகுதலை குறைக்கும் வண்ணம் புல்வெட்டும் கருவி 10 எண்ணம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற இரு கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். இதற்கு முன் 10 வருடங்களில் இச்சலுகையை அனுபவிக்காதவராகவும் புல் வெட்டும் கருவி 50% தொகையை ஏற்பவராகவும் இருக்க வேண்டும்.
ஈ ) எல்லா இனங்களிலும் 30% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் குறுவிவசாயிகள் மற்றும் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திடவும், தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான தீவன விதைகளை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.