இனி தேங்காய் உடைக்கும் பொழுது இதை மறக்காமல் கவனியுங்கள்.
- நல்ல காரியங்கள் துவங்குவதற்கு முன்னால் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது என்பது அனைவரின் வழக்கமாக உள்ளது.
- முக்கியமான நாட்களான பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் தவறாமல் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருகின்றோம்.
- திருமணம், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கு முன்னரும் தேங்காய் உடைத்து கடவுளுக்கு பூஜை செய்கின்றோம்.
- இவ்வாறு கடவுளுக்கு பூஜை செய்து பின்னர் தேங்காய் உடைக்கும் அந்த தருணங்களில், உடைக்கும் தேங்காய் நல்லவிதமாக உடைய வேண்டும் என்று நமது மனது பதைபதைத்து கொண்டுதானிருக்கும்.
- இவ்வாறு பூஜையில் உடைக்கப்படும் தேங்காயை வைத்து நமக்கு நடக்க இருப்பது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
- இது நமது முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள முக்கிய குறிப்புகள் ஆகும்.
தேங்காயில் ரகசியங்கள்
பூஜை தேங்காய் உணர்த்தும் தீமை பயன்:
- பூஜையில் உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் நமக்கு உடல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.
- உடைக்கப்படும் தேங்காய் சிதறி தூள் தூளாக உடைந்தால் நமக்கு தொழிலில் ஏதேனும் பிரச்சனை உண்டாகும். அல்லது பண விரையம் ஏற்படும் என்று அர்த்தம்.
- தேங்காய் சிறிது கோணலாக உடைந்தால் ஏதேனும் சிறிய மனக்கவலைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தம்.
- ஆனால் இவற்றை எல்லாம் கெட்ட சகுனம் என்று என்ன வேண்டும்.
- கடவுள் நமக்கு முன்கூட்டியே உணர்த்துகிறார் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்வது நல்லது.
பூஜை தேங்காய் உணர்த்தும் நல்ல பலன்:
- தேங்காய் இரண்டு சரி பாதியாக வட்ட வடிவில் உடைந்தால் நாம் நினைத்த காரியங்கள் நன்றாக நிறைவேறும்.
- துவங்கவிருக்கும் காரியமும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லவிதமாகவே நடைபெறும் என்று அர்த்தம்.
- உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
- மற்றும் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- தேங்காய் உடைக்கப்படும் நேரத்தினை பொருத்து உங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கும் நன்மை தீமைகள் எந்த காலகட்டத்தில் வரப்போகும் என்பதனை தோராயமாக கணிக்க முடியும்.
- காலை வேளையில் தேங்காய் உடைக்கப்பட்டு இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் ஒரு பத்து நாட்களுக்குள் உங்களிடம் வந்தடையும்.
- மதிய வேளையில் தேங்காய் உடைக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கான பலன் ஒரு மாத காலத்திற்குள் உங்களை வந்தடையும்.
- மாலை வேளையில் தேங்காய் உடைத்து இருந்தால் உங்களுக்கான பலன் மூன்று மாதங்களில் உங்களை வந்து சேரும்.
- இரவு நேரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கான பலன் 6 மாதத்தில் உங்களை வந்தடையும்.
- இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இப்பதிவு நமது முன்னோர்கள் நமக்கு சொன்ன பலன்கள் ஆகும்.
- நமது முன்னோர்கள் பின்பற்றிய பல விஷயங்கள் எப்பொழுதும் உண்மையாகவே இருந்துள்ளன.
- இவற்றின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் சூழ்நிலையை சரி செய்து கொள்ளுங்கள்.
- எப்பொழுதும் நல்லதை நினைத்தோம் என்றால் நமக்கும் நல்லதே நடக்கும்.