லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் அவர் நடித்து இருக்கும் கதாபாத்திரத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது. இதற்காக, ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர் இந்த வீடியோவில் அர்ஜுன் ஆக்ரோஷ வில்லனாக தெறிக்கவிட்டு இருக்கிறார்.