Sunday, November 3, 2024
Homeவர்த்தகம்செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்

செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் தீவிர ஆர்வம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்புகள்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. அதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் 50 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் 30 நிறுவனங்களில் இடம்பிடிக்கும் என்றார்.

 தீபாவளிப் பரிசாக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ‘ஜியோ க்ளவுட்’ என்ற புதிய வசதி வாயிலாக, 100 ஜி.பி., இலவச சேமிப்பக வசதி வழங்கப்படும்

 ஜியோ போன் கால் ஏ.ஐ., என்ற வசதியில், 49 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள், போன் அழைப்புகளை பதிவு செய்து, ஜியோ க்ளவுட் சேமிப்பகத்தில் சேகரிக்கலாம். போன் உரையாடலை எழுத்தில் பெறவும் வசதி

 ரிலையன்ஸ் குழுமத்தின் வர்த்தகம் 10 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ரிலையன்ஸ் நிறுவனம், மொத்தம் 5.28 லட்சம் கோடி ரூபாயை பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்துள்ளது

 பல்வேறு வரிகள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் 1.86 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியதன் வாயிலாக, அரசின் கருவூலத்துக்கு நாட்டின் மிகப் பெரிய பங்களிப்பாளராக, ரிலையன்ஸ் உள்ளது

 அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களின் வருவாய், லாபத்தை இரட்டிப்பாக்க இலக்கு

 குஜராத்தின் ஜாம்நகரில், 30 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பேட்டரி ஆலையில், அடுத்த ஆண்டில் உற்பத்தி தொடங்கும்

 மின் உற்பத்திக்காக, குஜராத்தின் கட்ச் பகுதியில் 2,000 ஏக்கர் பயனற்ற நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.

 ‘ஜியோ ஏர்பைபர்’ வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ள நிலையில், மாதந்தோறும் 10 லட்சம் பேரை இணைக்க திட்டம்

 விலை உயர்ந்த நகை வணிகத்தில் ஈடுபடவும், அழகுசாதனப் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டம்

 இந்தியாவை விளையாட்டில் சிறந்த நாடாக முன்னேற்றம் அடையச் செய்ய, ரிலையன்ஸ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக பங்குச் சந்தைக்கு ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வரும், 5ம் தேதி நடக்கும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

1 COMMENT

  1. Thank you for sharing this insightful article! I found the information really useful and thought-provoking. Your writing style is engaging, and it made the topic much easier to understand. Looking forward to reading more of your posts!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments