அருண் விஜய் பார்டர், மிஷன் சாப்டர் 1, பாலாவின் வணங்கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு
கொடிவீரன், மருது, கொம் பன்,விருமன், காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா. இப்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகிறது இந்த படத்துக்கு அருண் விஜய் உடல் எடையை கூட்டுகிறார். இப்படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக அதிதி ஷங்கர் அல்லது வாணி போஜன் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்க உள்ளார்.
படத்தின் ஸ்கிரிப்ட் வேலை களை முத்தையா முடித்திருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் நெல்லையில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.