இராமநாதபுரத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமை வகித்தார்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட இக்குழு
இராமநாதபுரம் மாவட்டம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிகளை உரிய காலத்தில் செயல்படுத்தி பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட இக்குழு சிறப்புடன் செயல்படும் என தெரிவித்ததுடன் 36 பயனாளிகளுக்கு ரூ.3.84 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் வழங்கினார் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.
மாவட்டம் திட்டங்களை விரைந்து முடித்திட
அதன்படி இக்குழு மாவட்டம் தோறும் சென்று அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்திட அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை பின்தாங்கிய மாவட்டம் என கூறினாலும், திட்டங்களின் செயல்பாடுகள் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அரசின் திட்டங்களை தடையின்றி பெற்று பயன்பெற வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம். அதற்கு அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையும். காரணம் ஒவ்வொரு அலுவலரும் ஒரு வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆற்றல் படைத்தவர்களாக உள்ளீர்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாத்துரை , அருள்,கருணாநிதி மனோகரன் , ராமலிங்கம் , வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.