Wednesday, April 17, 2024
Homeஆன்மிகம்காகம் காட்டும் சகுனம் 

காகம் காட்டும் சகுனம் 

  • மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர்.
  • இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம். ‘காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் பாடியுள்ளார்.

பயணம் இனிதாகும்!

  • பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும்.
  • பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால், பயணம் இனிதாகும்.
  • ஆணும் பெண்ணுமாய் காகங்கள் இருந்து கரைந்துகொண்டிருந்தால், பெண்கள் சேர்க்கை ஏற்படும்.
  • ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம்.
  • அதே நேரம், பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், அந்தப் பயணத்தால் பலவிதமான தன லாபம் ஏற்படும்.
  • வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது; நல்ல உணவு கிடைக்கும்.
  • யாத்திரை புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும்.
  • உதாரணமாக, சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், வெண்ணிறப் பொருள் வெள்ளி லாபத்தையும், பஞ்சு போன்றவை வஸ்திர லாபத்தையும் குறிக்கும்.
  • இவ்வாறு உள்ள பொருட்களை அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால், அந்தந்த வழிகளில் நஷ்டம் ஏற்படும்.

தன லாபம் உண்டு!

  • ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.
  • அதே நேரம், காகம் அந்தக் குடத்துக்குள் அலகை நுழைத்தால், புத்திரனுக்கு ஆகாது. அந்தக் குடத்தின்மீது காகம் எச்சமிட்டால், நல்ல உணவு கிடைக்கும்.
  • காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம், பஞ்சம் வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.

யுத்த அறிவிப்பு!

  • காரணமின்றி ஒருவரின் மேலே படும் காகம், அவருக்கு உடல் உபாதை நேரும் என்பதையும், இடமிருந்து வலமாகச் சுற்றிப் பறக்கும் காகம் நன்மையையும், வலமிருந்து இடமாகச் சுற்றும் காகம் தீமையையும் காட்டும்.
  • உரத்த குரலில் பல காகங்கள் கூட்டமாக ஒரு ஊரின் மேலாகப் பறப்பது, அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.படைவீரர் பகுதியில் உட்கார்ந்து ஒலியெழுப்பும் காகம், யுத்தம் வர இருப்பதைக் காட்டும்.

பஞ்சம் வருமா?

  • பொதுவாக, எந்த உணவையும் தனக்கெனச் சேர்க்காமல், பிற காகங்களுடன் பகிர்ந்துண்ணும் சிறப்பியல்புடையது காகம்.
  • இத்தகைய குணம் கொண்ட காகம், நெல் போன்ற தானியங்களை அள்ளிச் சென்று சேமிப்பது, நாட்டில் பஞ்சம் வரும் என்பதற்கான அறிகுறி!
  • நல்ல மரங்களில் காகம் கூடு கட்டுவது நற்பலனையும், பட்டுப்போன, எரிந்துபோன மரங்களில் கூடு கட்டுவது வரப்போகும் துன்பத்தையும் காட்டும்.
  • தன் குஞ்சுகளுடன் கூட்டில் வசிக்கும் காகம், சுபிட்சத்தைக் குறிக்கும். முட்டை இடாத காகம், முட்டையைக்
  • கீழே தள்ளி உடைக்கும் காகம், ஒரு முட்டை மட்டுமே இடும் காகம் போன்றவை தீமையைக் காட்டும். ஆழ்ந்த கருமை நிறமுள்ள காகத்தைக் கண்டால், திருடர் பயம் ஏற்படும்.

ஆண் குழந்தை பிறக்கும்!

  • பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.
  • கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.
  • வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.
  • சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.
  • காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

பெருமழை பெய்யுமா?

  • பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரை களில் இருந்துகொண்டு மழைக்காலங்களில் காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம்.
  • மற்ற காலங்களில் இவ்வாறு காகம் கரைந்தால், மழை மேகங்கள் மட்டுமே வந்துபோகும்; மழை வராது!
  • நீர் நிலைகளைப் பார்த்துக் காகம் கரைவதும், மணல் புழுதி அல்லது தண்ணீரில் காகம் தன் தலையை மூழ்கச் செய்வதும் நல்ல மழைக்கான அறிகுறிகளாகும். மற்ற காலங்களில் இவ்வாறு செய்வது தீது!

காகமும் திசைகளும்

  • தென்கிழக்கு: இந்தத் திசை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.
  • தெற்கு: உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபமும், இசை யில் புலமையும் அமையும். சங்கீத வித்வானின் நட்பு கிடைக்கும்.
  • தென்மேற்கு: நல்ல தகவல் வரும். குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்றவை சேரும்.
  • மேற்கு: மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.
  • வடமேற்கு: ஆயுதங்கள், கொடியில் விளையும் பழங்கள், கிடைக்கும். உலோகங்களால் லாபம் ஏற்படும்.
  • வடக்கு: ஆடைகள், நல்ல உணவு ஆகியன கிடைக்கும். வாகனங்கள் சேரும்.
  • வடகிழக்கு: நல்ல தின்பண்டங்கள், பொதி சுமக்கும் எருது, பொதி சுமக்கும் வாகனங்கள் சேரும். வீட்டின் கூரை மீது அமர்ந்து

காகம் கரைந்தால், மேற்கூறிய அனைத்தும் சேரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments