Tuesday, April 16, 2024
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் தணிக்கைக்கான ஆய்வு பணிகள் கூட்டம்! துறை ஆணையர் மதிவாணன் தலைமையில்

ராமநாதபுரத்தில் தணிக்கைக்கான ஆய்வு பணிகள் கூட்டம்! துறை ஆணையர் மதிவாணன் தலைமையில்

ராமநாதபுரத்தில் தணிக்கைக்கான ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈராண்டு தணிக்கைக்கான ஆய்வு பணிகள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் மதிவாணன், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அவர்கள் மாவட்டத்தில் 2018 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பணி திறன் பதிவேடுகள்

இந்த ஆய்வின்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, சிறப்பு செயலாக்கத்திட்டம், சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, பள்ளி கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் 2018 முதல் 2021 வரை அனைத்து அலுவலர்களின் பணி திறன் மற்றும் பதிவேடுகள், நிதி ஒதுக்கீட்டு பணிகள் உட்பட அலுவலர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து ஆவணங்களை சிறந்த முறையில் பராமரித்து பாதுகாப்பதுடன் மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டுமென மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் மதிவாணன் தெரிவித்தார்.

அலுவலகங்கள் ஆய்வு

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலகம், தெற்குதரவை ஊராட்சியில் இயற்கை வேளாண் சாகுபடி நிலம் ஆகியவற்றை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் மதிவாணன் பார்வையிட்டார்.

உதவித்தொகை

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.36,000 மதிப்பீட்டில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணையினையும், 2 நபர்களுக்கு ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி சான்றிதழ், 1 பயனாளிகளுக்கு ரூ.7000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், 1 பயனாளிக்கு ரூ.5018 மதிப்பீட்டில் இலவச சலவை பெட்டி என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.48,018 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் மதிவாணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் முருகேசன், அலுவலக மேலாளர் ஜெயமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments