இராமநாதபுரம் மாவட்டம் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மேற்கொண்டு இன்றைய இளம் தலைமுறையினர் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், வேண்டுகோள்
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருளால் ஏற்படும் தீமை குறித்தும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்த உறுதி மொழியினை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இராமநாதபுரம் புறப்பகுதியில் விழிப்புணர்வு
இராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.
இப்பேரணி பொதுமக்கள் அறிந்து பயன்பெற்றிடும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தி பேரணி புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நாகராஜன் , துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.