முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர்களின் முன்னிலையில்
விழிப்புணர்வு பேரணிக்கு,வட்டார வள மையம் சார்பில் மேற்பார்வையாளர் மோகனவள்ளி தலைமை வகித்தார். முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்தனவேல், காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களின் பங்கேற்பு
பேரணியானது பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய , முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து முடிவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ,விழிப்புணர்வு வாசகங்கள் மாணவிகள் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்திய படி பேரணியாக சென்றனர். பேரணிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் சாந்தி, குமரேசன், நாகராஜ், தசைப்பயிற்சியாளர் விஜயசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.