Wednesday, October 4, 2023
Homeஆன்மிகம்நன்மைபயக்கும் செவ்வந்தி பூ

நன்மைபயக்கும் செவ்வந்தி பூ

நன்மைபயக்கும் செவ்வந்தி பூ

செவ்வந்தியின் மகிமைகள்:

  • கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவழிபாட்டில் பிற பொருட்களை காட்டிலும் பூக்கள் தான் முக்கிய பங்கு வகுக்கின்றன.
  • பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லையெனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்தனை புனிதமானது.
  • புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது.
  • இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது.
  • மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.
  • அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தெய்வத்திற்கும், வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா?

  • என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.
  • உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணுப்பெருமானுக்கு மாலையாக கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது லட்சம் பொன் மலர்களுக்கு சமம்.
  • ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.
  • அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும்.
  • ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.
  • அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் செய்ய முடியும்.

இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது.

  • செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
  • இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.
  • மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments