Tuesday, June 6, 2023
Homeஉடல்நலம்கொய்யா பழத்தின் நன்மை, தீமைகள் பற்றி அறிவோம்.

கொய்யா பழத்தின் நன்மை, தீமைகள் பற்றி அறிவோம்.

கொய்யா இலை

புண்கள் உள்ள இடத்தில் கொய்யா இலையை கசாயமாக வைத்து கழுவி வந்தால் சீக்கிரம் ஆறும். வெண்ணீரில் கொய்யா இலையை போட்டு சூடு பண்ணிய தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும்.

கொய்யா இலையை பொடியாக்கி பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகி விடும். அதேபோல் பற்களில் உள்ள ஈறுகளின் வலி, வீக்கம், துர்நாற்றமும் குறையும்.

நோய் எதிர்ப்புத் சக்தி

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ‘சி’ உடலில் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிரிப்பதுடன் நோய் கிருமிகளின் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.

உடல் சூடு தணியும்

தினந்தோறும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைந்து மலச்சிக்கல் பறந்து ஓடிவிடும்.

முடி பளபளப்பாக, கருமையாக

அதிகம் கொட்டை உள்ள சிவப்பு கொய்யா பழத்தை நன்றாக வெளியிலில் காயவைத்து பொடியாக அரைக்க வேண்டும். பின்னர் கொய்யா மரத்தின் இலை சாறுடன், அரைத்த பொடியை கலந்து தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முடி பளபளப்பாகவும், கருமையாகவும் மாறிவிடும்.

முகம் சிவப்பழகு

கொய்யா பழத்தை மட்டும் நன்றாக அரைத்து முகத்தில் பூசி வந்தால், சில மாதங்களிலேயே முகம் சிவப்பாகி அழகாக மாறும்.

முகப்பரு

கொய்யா மர இலையை பேஸ்ட் போல் அரைத்து அதை முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

கொய்யா பழத்தின் நன்மை

நீரிழிவு நோய்

கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. கொய்யாப்பழம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் மார்பகப் புற்றுநோய் செல்களை அழித்து விடுகிறது.

கண் குறைபாடு, நரம்பு மண்டலம்

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக இருப்பதால் கருவில் வளரும் குழந்தைக்கு கண் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது.

மது அருந்தும் எண்ணம்

மதுவுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மது குடிக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து விடும்.

தீமைகள்

கொய்யா பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும்.

கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் தலைக்கு ஏறி வாந்தி, மயக்கம் ஏற்படும்.

கொய்யாப் பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால் தொண்டை வலி உண்டாகும்.

அதேபோல் சாப்பிடுவதற்கு முன் கொய்யாப் பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments