- கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது
- இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும்.
- நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
- அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது
வகைகள்
- கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை,
- பெரும் கற்றாழை,
- பேய்க் கற்றாழை,
- கருங் கற்றாழை,
- செங்கற்றாழை,
- இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு.
- இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.
- கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிறத் திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
- தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.
பயன்கள்
- கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும்.
- உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.
- கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது.
- இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில்
- கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.
- சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.
- மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
மருத்துவத்தில்
- கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
- ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
- சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, குடல்புண், கருப்பை நோய்கள், மூலநோய், கண்ணோய்கள் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
- கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது
அலங்காரச் செடிகள்
- கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.
- கற்றாழை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும்.
- சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.
கற்றாழை ஒரு அழிவில்லா தாவரம்
- இது மண் வளம் இல்லாத இடத்திலும் வளரும்.
- உலகெங்கிலும் நன்மை தரும் செடிகள் பல ஆயிரம் இருக்கின்றன அவற்றுள் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.