Thursday, March 28, 2024
Homeஉடல்நலம்தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இனிப்புச் சுவை கொண்டது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குப் பிடித்த நிறத்தையும் வடிவத்தையும் கொண்டது கேரட்.

காய்கறிகள் சாப்பிடுவதைப் பெரிதாக விரும்பாதவர்கள் கூட, உணவில் கேரட்டை எடுத்து கொள்ள தயக்கம் காட்ட மாட்டார்கள். ஐரோப்பிய நாகரிகத்தின் தாக்கத்தினால் நாம் அடைந்த பலன்களுள் கேரட் சாகுபடியும் ஒன்று. பொதுவாக, கேரட் சாப்பிடுவதால் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்ற எண்ணம் பரவலாக உண்டு.

இதனைப் பச்சையாகக் கூடச் சாப்பிடலாம். அவ்வாறு உண்டால்தான் இதில் இருக்கும் சத்துகளை முழுமையாகப் பெற முடியும்.

பாதி வெந்த நிலையில் சமைத்துச் சாப்பிடுவது இன்னும் ருசியாக இருக்கும். இதில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் K1, வைட்டமின் B6 உள்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

 

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ரத்த அழுத்தம் குறைத்தல், கண் பார்வையைக் கூர்மையாக்குதல், எலும்புகளை உறுதியாக்குதல், புரதம் அதிகப்படுத்துதல், ஆற்றல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கேரட் உண்பதால் கிடைக்கின்றன.

கேரட் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதில் அடங்கியுள்ள பொட்டாசியமே இதற்குக் காரணம்.

கேரட் சாறுடன் பாதாம் பருப்பு சேர்த்து உண்டால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். கால்சியம் குறைபாட்டைப் போக்க, இதனைப் பச்சையாகச் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அடங்கியுள்ள வைட்டமின் A பார்வை தொடர்பான ஆரோக்கியத்தைப் பரிசளிக்கிறது. பீட்டா கரோட்டின் கேரட்டில் உள்ளது. முதுமையில் ஏற்படும் கண் புரை உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகளைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரும் இதனைச் சாப்பிடலாம்.

இதனைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். டயட் விரும்பிகள் இதனைத் தாராளமாக உண்ணலாம்.

கேரட் சாப்பிடுவதால் முகமும் சருமமும் பளபளப்பாகும். புத்துணர்வைப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் இதனைத் தினமும் உணவாகவோ, பானமாகவோ உட்கொள்ளலாம்.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இதனால் சரும வறட்சி தடுக்கப்படும். இதில் இருக்கும் வைட்டமின் C எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இதனைத் தொடர்ச்சியாக உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

பற்களையும் ஈறுகளையும் கேரட் பலப்படுத்துகிறது. கேரட்டை மென்று தின்பதால் வாய்ப்புண்கள் சரி ஆகும்.

வாயில் இருக்கும் கிருமிகள் நீங்கும். காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்தால், குடலில் இருக்கும் புழுக்கள் வெளியேற்றப்பட்டு வயிறு சுத்தமாகும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. கேரட்டில் இது அதிகளவில் இருப்பதால், இன்சுலின் சுரப்பு சீரடைகிறது.

இதனால் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை இது அகற்றுகிறது.

இதனால் இதய நோய்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான உதிரப்போக்கு நிகழும்போது, பெண்கள் கேரட் சாப்பிடுவதன் மூலமாக அதனைச் சரி செய்யலாம். மேலும் இதனைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வராமலும் தடுக்கலாம்.

 

இதையும் படியுங்கள் || தமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில், அடுத்த 3 நாளைக்கு யாரும் வெளிய வராதீங்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments