Tuesday, June 6, 2023
Homeஅறிந்து கொள்வோம்லிங்க வழிபாடு தரும் பயன்கள்

லிங்க வழிபாடு தரும் பயன்கள்

நம் எல்லோருக்கும் பரம்பொருளாக விளங்கும் ஈசனைப் பற்றி சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பிரபஞ்சமே அவர் அருளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆன்மா இறுதியில் அவர் காலடியில் தான் சென்றடையும். இதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

இருக்கும் நாளில் தினமும் அவருடைய நாமங்களை சொல்லுவதும், அவர் அருள் சின்னமான திருநீறைப்  பூசுவதும் நம் இந்துக்கள்  ஒவ்வொருவரின் கடமையாகும். நாமும் இதைப்பின்பற்றி, நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம்.

லிங்கங்கள் பல வகைகளாக உள்ளன உள்ளன. இங்கு 16 வகையான லிங்கங்களைப் பற்றி பார்ப்போம்.

இஷ்ட லிங்கம்

மரகதம், படிகம், கருங்கல் இவற்றால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக வாங்கி, தன் ஆயுள் உள்ள வரை தன்னிடமே வைத்து கொண்டு தினமும் தான் செல்லுமிடம் எல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபாடும் லிங்கம் இஷ்ட லிங்கம் ஆகும்.

ஷணிக லிங்கம் 

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பிறகு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம். இதை செய்வது எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கம் பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
சிவ ஆகமப்படி, பின்வரும் 16 வகையான பொருட்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுவது பெரும் சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள். எந்த வகை பொருட்களால் ஆன லிங்கத்தை வழிபட்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது.

லிங்க வழிபாடு தரும் பயன்கள்

புற்று மண் லிங்கம் —– முக்தி தரும்.

ஆற்றுமண் லிங்கம் —- பூமி லாபம் உண்டாகும்.

பச்சரிசி லிங்கம் ——- பொருள் பெருகும்.

சந்தன லிங்கம் ——- சுகபோகம் உண்டாகும்.

மலர் லிங்கம்  —– நீண்ட ஆயுள் கிடைக்கும்.

அரிசிமாவு லிங்கம் —- உடல் வலிமை ஏற்படும்.

பழ லிங்கம் —– நல்லின்ப வாழ்வு  கிடைக்கும்.

தயிர் லிங்கம் —– நற்குணம் பெறலாம்.

தண்ணீர் லிங்கம் —- மேன்மை அடையலாம்.

அன்ன லிங்கம் —- உணவு பஞ்சம் ஏற்படாது.

தர்ப்பைப்புல் லிங்கம் —- பிறவியில்லா நிலை தரும்.

சர்க்கரை, வெல்லம் லிங்கம் —- இன்பம் கிடைக்கும்.

பசு சாண லிங்கம் —– நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

வெண்ணெய் லிங்கம் —- மனமகிழ் அதிகரிக்கும்.

ருத்ராட்ச லிங்கம் —– நல்லறிவு வாய்க்கும்.

விபூதி லிங்கம் —— செல்வவளம் உயரும்.

 

Also Read || கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments