- உடம்பில் லேசான தீ காயம் பட்டுவிட்டால் உடனடியாக டூத் பேஸ்டை எடுத்து தீக்காயம் பட்ட இடத்தில் தடவினால் அந்த இடம் கூலிங்காக இருக்கும்.
- ஓரிரு நாட்களில் தீக்காயம் சரியாகி விடும் பூச்சிகள் கடித்து அரிப்பு, வீக்கம், கொப்புளம், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அந்த இடத்தில் டூத் பேஸ்ட் தடவ வேண்டும்.
- தொடர்ந்து தடவி வந்தால் சீக்கிரம் குணமாகும்.
- முகத்தில் தூங்குவதற்கு முன் பருக்கள் இருக்கும் இடத்தில் டூத் பேஸ்ட் தொடர்ந்து தடவி வந்தால் இரண்டு மூன்று நாட்களில் மறைய தொடங்கும். காலை எழுந்தவுடன் டூத் பேஸ்ட் தடவிய இடத்தை நன்றாக கழுவ வேண்டும்.
- பற்கள், நகங்களுக்கு எனாமல் கோட்டிங் போடுவது வழக்கம்.
- நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் மேல்புறமும் இடுக்குகளிலும் டூத் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்க்க வேண்டும்.
- தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் வலுப்பெறும்.
- டூத் பேஸ்டை எடுத்து கையில் தேய்த்து கழுவி விட்டு பின்னர் மீன், வெங்காயம், பூண்டு இவைகளை கழுவும்போது வரக்கூடிய வாடை வராது.
- குழந்தைகள் வீட்டு சுவர்களில் பென்சில், பேனா, கிரேயான் வைத்து கிறுக்கி விளையாடுவார்கள்.
- இதை ஈரத்துணியில் பேஸ்ட் தடவி கிறுக்கிய இடத்தில் தேய்த்தால் மறைந்து விடும்.
- வெள்ளி, தங்க பொருட்களில் ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்டை தடவி சிறிது நேரம் தேய்த்தால் புதுசு போல தோன்றும்.
- சி.டி, டி.வி.டி மற்றும் டி.வி. களில் ஒருவித கோடு விழும் அந்த கோடு விழுந்த இடத்தில் துணியில் சிறிதளவு டூத் பேஸ்டை தடவி தேய்த்தால் அந்த கோடு மறைந்து விடும்.
- குழந்தைகள் குடிக்கும் பால் பாட்டிலில் ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.
- பால் பாட்டிலில் சிறிதளவு பேஸ்ட்டை போட்டு நன்றாக பிரஷ் வைத்து அலசினால் துர் நாற்றம் ஓடிவிடும்.
- வீட்டிலுள்ள அயன்பாக்ஸில் ஒருவித துருப்பிடித்து விடும் இதை சிறிதளவு டூத் பேஸ்ட் துணியில் வைத்து தேய்த்தால் அந்த துரு மறைந்துவிடும்.
- டூத் பேஸ்ட்டில் உள்ள சிலிக்கான் துருவை நீக்கி விடும்.