Friday, March 29, 2024
Homeமருத்துவம்முடி உதிர்வை குறைக்கும் 'வைட்டமின் ஈ' யின் மருத்துவ குறிப்புக்கள்

முடி உதிர்வை குறைக்கும் ‘வைட்டமின் ஈ’ யின் மருத்துவ குறிப்புக்கள்

  • உடலுக்கு தேவையான சத்துகளில் முக்கியமானது வைட்டமின் ஈ இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
  • வைட்டமின் ஈ சத்து உட்கொள்வதால் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடலில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்கின்றன.
  • இது எளிதில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.
  • பொதுவாக சருமத்தில் ஏற்படுகின்ற தோல் சுருக்கம் ,வயதான தோற்றம், பொலிவிழந்த முகம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய வைட்டமின்  உதவுகின்றன.
  • என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!! ஆனால் அதையும் தாண்டி உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை இது நமக்கு கொடுக்கிறது.
  • நம் உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்களை நம் தினமும் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் தொடங்கி
  • கடலை எண்ணெய் ,ஆலிவ் ஆயில்,என ஒவ்வொரு சத்துக்களும் ஒவ்வொரு எண்ணையில் அடங்கியுள்ளது.
  • இயற்கையான முறையில் காய்கறி ,பழங்களில் இருந்து வைட்டமின் ஈ சத்துக்களை உட்கொண்டாலும் சரி அல்லது
  • மருந்தகங்களில் கிடைக்கின்றன ஈவியன் Evion என்கின்ற வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்தினாலும் சரி இரண்டுமே நன்மை தரவல்லது.
  • அந்த வகையில் இப்பதிவில் நாம் வைட்டமின் ஈ சத்துக்களை சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம் .

கண்களை பாதுகாக்கும்

  • கண் சம்பந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுபவர்கள் வைட்டமின் ஈ நிறைந்த உணவை தினமும் சாப்பிடுவது நல்லது.
  • கண் பார்வை மங்குதல், பார்வை குறைபாடு, வயது முதிர்வு காரணமாக கண்களில் புரை வளர்வது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்
  • வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த உணவான பாலக்கீரை, பாதாம், வேர்க்கடலை, ப்ரோக்கோலி, கடுகுக் கீரை, சிவப்பு குடமிளகாய், பிஸ்தா போன்றவைகளில்
  • ஏதேனும் ஒன்றை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் கண் பிரச்சினைகள் குறைவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வைட்டமின் ஈ நிறைந்தஉணவுகளை சாப்பிட நேரம் இல்லாதவர்கள் மருந்தகங்களில் கிடைக்கும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் அடிக்கடி உண்டு வந்தால்
  • கண் பார்வை தெளிவாகும் மேலும் கண் சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுப்பதாகவும் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு சோர்வாக இருப்பார்கள்.
  • அவர்கள் இயற்கையான முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கண்டிப்பாக வைட்டமின் ஈ சத்துள்ள உணவை தினம் தோறும் உட்கொள்வது அவசியமாகிறது.
  • வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
  • இதனால் உடலில் தொற்று கிருமிகள் நம்மை தாக்காதவாறு எதிர்த்துப் போராடும் சக்தியை கொடுக்கிறது

தலைமுடி கருமையாக வளர

  • முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் விட்டமின் ஈ லாவண்டர் எண்ணையை தலைக்கு அப்ளை செய்வதன் மூலம் நல்ல பலனை காணலாம்.
  • வைட்டமின் ஈ லாவண்டர் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை கீழே கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்

  • வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் -2
  • உலர்ந்த லாவண்டர் பூக்கள் – ஒரு கைப்பிடி
  • தேங்காய் எண்ணெய் -தேவைக்கேற்ப

 

செய்முறை

  • லாவண்டர் பூக்கள் இலைகள் நன்கு உலர்த்தி கண்ணாடி டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • அதனுடன் சுத்தமான நாட்டு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையை கண்ணாடி டப்பாவில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • அதனுடன் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையில் உள்ள எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கண்ணாடி டப்பாவை ஒருவாரம் வரை இருட்டான இடத்தில் வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெய் வடிகட்டி வேறு ஒரு டப்பாவில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது லாவெண்டர் வைட்டமின் ஈ ஹேர் ஆயில் தயார்.
  • இந்த எண்ணெயை வாரத்தில் 2 அல்லது 3 முறை தலைமுடிகளில் மற்றும் முடியின் வேர் பகுதிகளில் மசாஜ் செய்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்
  • பிறகு உங்களுக்கு பிடித்தமான ஷாம்புவை கொண்டு தலையை அலசுங்கள்.
  • இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே உணரலாம்.
  • மேலும் சிலருக்கு நெற்றியில் வழுக்கை அதிகமாகிக்கொண்டே போகும் அவர்கள் இந்த குறிப்பு தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்

  • பசலை கீரை
  • வேர்க்கடலை
  • ஆலிவ் ஊறுகாய்
  • சூரிய காந்தி பூ விதை
  • சத்தான உளர் மூலிகைகள்

வைட்டமின் ஈ

 

Also read || குக்கரில் உணவை சாமைபதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments