Saturday, December 9, 2023
Homeமருத்துவம்சருமத்தை அழகாகும் பெர்ரி பழங்கள்

சருமத்தை அழகாகும் பெர்ரி பழங்கள்

  • பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.
  • பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
  • பெர்ரி பழங்கள் சத்தானவை. சிறிய அளவில் இருக்கும். இது கூழ் போன்று இருக்க கூடும்.
  • இது வட்டவடிவில் இருக்கும் நிறங்கள் வணணமயமாக இருக்கும். பிரகாசமாக இருக்கும்.
  • இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருக்கும்.இது சுவையாகவே இருக்கும்.
  • சத்தானதும் கூட. மேலும் இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
  • பெர்ரிகளில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. உயர் கார்ப் உணவுகளோடு எடுத்துகொள்ளும் போது அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் போது இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்தலாம்.
  • பெர்ரிகள் நார்ச்சத்து நிறைந்தவை. முழுமையான உணவை எடுத்துகொண்ட திருப்தியை அளிக்கும். 7 விதமான பெர்ரிகளின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
  • நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி என்று சொல்லலாம். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் பாலிபினால்களும் உள்ளன.
  • இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்யும்.

ராஸ்பெர்ரி

  • இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிக பொட்டாசியம் உள்ளது.
  • இது ரத்த அழுத்தம் மற்றூம் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இது தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்தவை. இது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகின்றன.
  • நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன.நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது.
  • இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்விலிருந்து பாதுகாக்கிறது.
  • ஆக்ஸிஜனேற்ற செறிவுகளில் ராஸ்பெர்ரி இருப்பதால் இது புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன. இது பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மூலமாக வீக்கத்தை குறைகிறது.
  • வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. நோய்த்தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்கிறது.

ப்ளூபெர்ரி பழங்கள்

  • ப்ளூபெர்ரி வைட்டமின் கே -இன் சிறந்த மூலமாகும். இது ஆந்தோசயனின் என்ற தாவர கலவை உள்ளது.
  • இதுதான் ப்ளூ பெர்ரிகளுக்கு நீல நிறத்தை வழங்குகிறது.
  • ப்ளூபெர்ரி எல்.டி.எல் கொழுப்பை குறைப்பதன் மூலம் மாரடைப்பை அபாயத்தை தடுக்க செய்கிறது.
  • இது தமனிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தின் அம்சங்களா  மேம்படுத்தகூடும். இது நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்யலாம்.
  • இது இதய ஆரோக்கியம், வலிமையான எலும்பு, தோல் ஆரோக்கியம், இரத்த அழுத்தம், நீரிழிவு மேலான்மை, புற்றுநோய் தடுப்பு மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவும்.
  • ஒரு கப் ப்ளூபெர்ரி நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின் சி ஒரு நபருக்கு 24% பரிந்துரைக்கின்றன.
  • இதில் இருக்கும் வைட்டமின் கே உள்ளடக்கம் இரத்த உறைதலை பாதிக்கும் என்பதால் இரத்த மெலிதலை பயன்படுத்துபவர்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி பழங்கள்

  • ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. அவை இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் உள்ளிட்ட இதய நோய்களுக்கான பல ஆபத்து காரணிகளை குறைக்கலாம்.
  • இது உடலில் ஹெச்.டி. எல் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. இது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க செய்கிறது.
  • வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் எனப்படும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இவை குறைந்த கலோரி கொண்ட உணவும் கூட மாங்கனீசு மற்றும் பொட்டாசியத்தின் நல்ல மூலம் இது.
  • எட்டு ஸ்ட்ராபெர்ரிகள் ஆரஞ்சு நிறத்தை காட்டிலும் அதிகமான வைட்டமின் சி கொண்டவை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments