Sunday, May 28, 2023
Homeஆன்மிகம்வீட்டில் அமைதி, செல்வம் பெறுக - ஆன்மீக குறிப்புகள் || Best spiritual practices

வீட்டில் அமைதி, செல்வம் பெறுக – ஆன்மீக குறிப்புகள் || Best spiritual practices

1. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசுமாடு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.

2. தினசரி விளக்கேற்றுவது குடும்பத்தில் செல்வம் பெருகும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்ற வேண்டும்.

3. பணம் கொடுக்கும் போது வாசல் படியில் நின்று பணம் கொடுக்கக் கூடாது.

4. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரை பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

5. ஆட்டுக்கல், அம்மி, வாசற்படி, உரல்,  இவைகளில் உட்கார கூடாது.

6. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.

7. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது.

8. எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது. ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

9. வீட்டில் யாரையும் சனியனே, எழவு என்று திட்டக்கூடாது.

10. கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. துணி மணிகளை உடுத்தி கொண்டே தைக்கக் கூடாது.

11. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக் கூடாது.

12. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

13. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

14. எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

15. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

 

இதையும் படியுங்கள் || கண் திருஷ்டி போக்கும் பரிகாரங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments