இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட பேரவைக்கூட்டம் ஆர்.டி உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாதர் சம்மேளன பேரவைக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ். பெருமாள் துவக்கி வைத்தார்.
மாநிலத் துணைத்தலைவர் பி.ராஜலட்சுமி சிறப்புரையாற்றினார், மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தி, ஏஐடியூசி மாவட்டச் என்.கே, ராஜன், கைத்தறி சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.ராதா, ஏஐடியூசி ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் சி. ஆர். செந்தில்வேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி செல்வராஜ், கே.ஆர், சுப்பிரமணியன், எஸ்.எம். ஜெயசீலன், பி.ஜீவானந்தம், ஜி. லோகநாதன்,கமுதி தாலுகா செயலாளர் சுப்பிரமணியன், டி.எம்.சிவக்குமார்.ஜே.ஆர்,ஹரிஹரன், எம். முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.