பா.ஜ.கட்சியின் பரமக்குடி ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட விருப்பதாக தகவல் பரவியதால் பரமக்குடி ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இன்று காலை பரமக்குடி நகர் போலீசார் முத்துலிங்கத்தை வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதனை கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என தொடர்ந்து விமர்சித்து வருவதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 360 கோடி மதிப்பில் போதைப்பொருள் கடத்தப்பட்டது மறைத்து திமுக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவது. பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில் சுமார் அரசு புறம்போக்கு நிலம் இரண்டே முக்கால் ஏக்கரை ஆக்கிரமித்து இதுவரை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமும் காட்டி வருவதால் பாஜகவினர் ஆக்கிரமிப்பு கையில் எடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 285 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது கருணாநிதி!! இராமேஸ்வரத்தில் 18-ம் தேதி மீனவர்களுடன் முதல்வர் கலந்துரையாடாலா? இல்லை கபட நாடாகமா? தமிழகத்தில் தொடர்ந்து பிரிவினை வாதத்தை கூரும் தமிழக முதல்வரை கண்டிக்கின்றோம். நம்பாதே நம்பாதே மீனவ சொந்தங்களே கலைஞர் மகனை நம்பாதே என வால் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருவது பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.