மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது ‘பைப்பரேசியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும்.
இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. ‘மிளகு’ என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.
* இது ஆன்டி ஆக்சிடென்ட்டுகளைப் பெற்றிருப்பதோடு, வைட்டமின் ஏ, சி,கே போன்றவற்றையும் நல்ல அளவிலே பெற்றிருக்கிறது.

* இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்தின் விளைவுகளுக்கு எதிர்ப்
பொருளாகவும் செயல்படுகிறது.* நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
* கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து அதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்க வேண்டும்.
* மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் போன்ற உறுப்புகள் நன்றாக இயங்கும்.
* மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி. தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக்கட்டுதல் நீங்கும்.