Saturday, December 2, 2023
Home Blog

புதிய பார்வை ராசிபலன் (03-10-2023)

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 16
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Oct 02 07:36 AM – Oct 03 06:12 AM

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Oct 03 06:12 AM – Oct 04 05:33 AM

கிருஷ்ண பக்ஷ சஷ்டி – Oct 04 05:33 AM – Oct 05 05:41 AM

நட்சத்திரம்

கார்த்திகை – Oct 02 06:24 PM – Oct 03 06:03 PM

ரோஹிணி – Oct 03 06:03 PM – Oct 04 06:29 PM

கரணம்

பாலவம் – Oct 02 06:49 PM – Oct 03 06:12 AM

கௌலவம் – Oct 03 06:12 AM – Oct 03 05:47 PM

சைதுளை – Oct 03 05:47 PM – Oct 04 05:33 AM

கரசை – Oct 04 05:33 AM – Oct 04 05:31 PM

யோகம்

வஜ்ரம் – Oct 02 10:28 AM – Oct 03 08:17 AM

ஸித்தி – Oct 03 08:17 AM – Oct 04 06:43 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:06 PM

சந்திரௌதயம் – Oct 03 9:31 PM
சந்திராஸ்தமனம் – Oct 04 10:30 AM

அசுபமான காலம்

இராகு – 3:07 PM – 4:37 PM

எமகண்டம் – 9:10 AM – 10:39 AM

குளிகை – 12:08 PM – 1:38 PM

துரமுஹுர்த்தம் – 08:34 AM – 09:22 AM, 10:56 PM – 11:44 PM
தியாஜ்யம் – 10:20 AM – 11:58 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:45 AM – 12:32 PM

அமிர்த காலம் – 03:41 PM – 05:16 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

கதா Upto – 06:03 PM
மாதங்கம்

செவ்வாய் ஹோரை

காலை

06:00 – 07:00 – செவ் – அசுபம்
07:00 – 08:00 – சூரி – அசுபம்
08:00 – 09:00 – சுக் – சுபம்
09:00 – 10:00 – புத – சுபம்
10:00 – 11:00 – சந் – சுபம்
11:00 – 12:00 – சனி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – குரு. – சுபம்
01:00 – 02:00 – செவ் – அசுபம்
02:00 – 03:00 – சூரி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சுக் – சுபம்
04:00 – 05:00 – புத. – சுபம்
05:00 – 06:00 – சந் – சுபம்
06:00 – 07:00 – சனி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசி பலன்கள் 

மேஷம்

குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் வழியில் விரயங்கள் ஏற்படும். உபரி வருமானம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : வருமானம் மேம்படும்.

கார்த்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்

பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். மந்தமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கார்த்திகை : பொறுமையுடன் செயல்படவும்.

ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.

மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.

மிதுனம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த ஒப்பந்தப் பணிகள் சாதகமாகும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பக்குவம் உண்டாகும்.

திருவாதிரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

புனர்பூசம் : நெருக்கடிகள் மறையும்.

கடகம்

அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். பரிசுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம் : மாற்றமான நாள்.

ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட சில வேலைகள் நிறைவுபெறும். விலகிச் சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : புதுமையான நாள்.

கன்னி

நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : மதிப்பு மேம்படும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : காரியங்கள் நிறைவேறும்.

துலாம்

சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : கையிருப்புகள் குறையும்.

விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

விருச்சகம்

சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில் சில மாற்றமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.

கேட்டை : மாற்றமான நாள்.

தனுசு

தனவரவு ஓரளவு இருக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்பு ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உத்தியோக பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மூலம் : சந்திப்பு ஏற்படும்.

பூராடம் : ஆர்வம் உண்டாகும்.

உத்திராடம் : அனுபவம் அதிகரிக்கும்.

மகரம்

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் : மதிப்பு மேம்படும்.

கும்பம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணிகளில் இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம்: அலைச்சல்கள் ஏற்படும்.

சதயம் : லாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

மீனம்

சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஆதரவான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தைகளுக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் முதல் வெளியீடாக ஹிந்தி படமான ஜவான்’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து, தமிழில் ஜெயம் ரவி உடன் நடித்துள்ள இறைவன்’ படம் வெளியாக உள்ளது. தற்போது டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ப்ளாக் ஷிப் டுயுட் விக்கி இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிக்கின்றனர். கோலமாவு கோகிலா’ படத்திற்கு பின் இருவரும் இணைந்து இந்த படத்தில் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ‘மண்ணாங்கட்டி’ என பெயரிட்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சான் ரோல்டன் இசையமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

அதிமதுரம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  1. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
  2. இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.
  3. ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
  4. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
  5. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும்.
  6. உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்… உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
  7. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
  8. இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து உண்டாகும்.அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்.
  9. தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும்.
  10. கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும். அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம்.
  11. ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும்.
  12. இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்.
  13. அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும்.
  14. மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும்.
  15. போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

அதிமதுரம் சாப்பிடும் முறை

  1. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்.
  2. கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
  3. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும்.
  4. தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
  5. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
  6. இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும்.
  7. இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
  8. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்.
  9. இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்.
  10. தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும். பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  11. சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்பு மற்றும் அதன் சுற்றுலா தளங்கள் ஒரு பார்வை!

  • வைகை நதியின் கரையில் அமைந்திருக்கும் மதுரை பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.
  • மதுரை மாநகரைசுற்றிலும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்புபெற்றவை.
  • பாண்டிய மன்னன் குலசேகரன் மீனாட்சி அம்மன் கோவிலை நகரின் மையத்தில் ஸ்தாபித்து அதைச் சுற்றி தாமரை வடிவிலான நகரை அமைத்தான்.
  • இந்த நகரில் சிவபெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. இன்றும் கூட சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
  • பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது.
  • இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன

 

கோவில் நகரம்:

  • கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன.
  • மதுரைக்கு மிக அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் ஆகும்.
  • அழகர்கோவில் காந்தி அருங்காட்சியகம் கீழக்குயில்குடி சமணர் படுகைகள் குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மீனாட்சியம்மன் கோயில் திருப்பரங்குன்றம் திருமலை நாயக்கர் மஹால் தெப்பகுளம் பழமுதிர்சோலை பாலமேடு ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
  • குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது.
  • இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர்.
  • இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியில்ல அனைத்து சுற்றல மையங்களுக்கும் உள்ளாட்சி அமைப்பால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • நாயக்கர் மஹால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பார்வை ராசிபலன் (2-10-2023)

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 15

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ திருதியை – Oct 01 09:42 AM – Oct 02 07:36 AM

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Oct 02 07:36 AM – Oct 03 06:12 AM

நட்சத்திரம்

பரணி – Oct 01 07:27 PM – Oct 02 06:24 PM

கார்த்திகை – Oct 02 06:24 PM – Oct 03 06:03 PM

கரணம்

பத்திரை – Oct 01 08:34 PM – Oct 02 07:36 AM

பவம் – Oct 02 07:36 AM – Oct 02 06:49 PM

பாலவம் – Oct 02 06:49 PM – Oct 03 06:12 AM

யோகம்

ஹர்ஷணம் – Oct 01 01:13 PM – Oct 02 10:28 AM

வஜ்ரம் – Oct 02 10:28 AM – Oct 03 08:17 AM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM

சூரியஸ்தமம் – 6:07 PM

சந்திரௌதயம் – Oct 02 8:39 PM

சந்திராஸ்தமனம் – Oct 03 9:32 AM

அசுபமான காலம்

இராகு – 7:40 AM – 9:10 AM

எமகண்டம் – 10:39 AM – 12:09 PM

குளிகை – 1:38 PM – 3:08 PM

துரமுஹுர்த்தம் – 12:33 PM – 01:20 PM, 02:56 PM – 03:43 PM

தியாஜ்யம் – 06:14 AM – 07:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:45 AM – 12:33 PM

அமிர்த காலம் – 01:49 PM – 03:20 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

சரம் Upto – 06:24 PM

திரம்

திங்கள் ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்

07:00 – 08:00 – சனி – அசுபம்

08:00 – 09:00 – குரு – சுபம்

09:00 – 10:00 – செவ் – அசுபம்

10:00 – 11:00 – சூரி – அசுபம்

11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்

01:00 – 02:00 – சந் – சுபம்

02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்

04:00 – 05:00 – செவ் – அசுபம்

05:00 – 06:00 – சூரி – அசுபம்

06:00 – 07:00 – சுக் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். கடன் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். குழப்பம் குறையும் நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கார்த்திகை : மதிப்புகள் மேம்படும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் ஏற்படும். விடாப்பிடியாகச் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். காலில் சிறு சிறு வலிகள்5 ஏற்பட்டு நீங்கும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

கார்த்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரோகிணி : புதுமையான நாள்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.

மிதுனம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். அலுவலக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சாதுரியமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். செயல்களில் தன்னம்பிக்கை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : காரியங்கள் நிறைவேறும்.

திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.

கடகம்

உறவுகளின் மத்தியில் மதிப்பு உண்டாகும். சகோதரர் வழியில் அனுசரித்துச் செல்லவும். அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்றச் சிந்தனைகள் மேம்படும். மருத்துவத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மை உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூரம் : சோர்வு குறையும்.

உத்திரம் : நன்மை உண்டாகும்.

கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். வியாபாரத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் குறைகூறாமல் இருக்கவும். வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : நெருக்கடிகள் ஏற்படும்.

அஸ்தம் : ஆலோசனை வேண்டும்.

சித்திரை : பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

துலாம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : சுறுசுறுப்பான நாள்.

சுவாதி : மதிப்பு மேம்படும்.

விசாகம் : அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய சரக்குகளின் மூலம் லாபம் மேம்படும். பணி நிமிர்த்தமாக சிலரின் அறிமுகம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

விசாகம் : தேவைகள் நிறைவேறும்.

அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.

கேட்டை : அறிமுகம் ஏற்படும்.

தனுசு

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். பணி நிமிர்த்தமான செயல்களில் கவனம் வேண்டும். இணைய பணிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : சிக்கனமாகச் செயல்படுவீர்கள்.

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.

மகரம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.

திருவோணம் : அனுபவம் மேம்படும்.

அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாகும். கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

சதயம் : ஆர்வம் உண்டாகும்.

பூரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும்.

மீனம்

நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்பு  அதிகரிக்கும்.

ரேவதி : நம்பிக்கை உண்டாகும்.

புதிய பார்வை ராசிபலன் (1-10-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 14
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை – Sep 30 12:21 PM – Oct 01 09:42 AM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Oct 01 09:42 AM – Oct 02 07:36 AM

நட்சத்திரம்

அஸ்வினி – Sep 30 09:08 PM – Oct 01 07:27 PM

பரணி – Oct 01 07:27 PM – Oct 02 06:24 PM

கரணம்

கரசை – Sep 30 10:58 PM – Oct 01 09:42 AM

வனசை – Oct 01 09:42 AM – Oct 01 08:34 PM

பத்திரை – Oct 01 08:34 PM – Oct 02 07:36 AM

யோகம்

வியாகாதம் – Sep 30 04:27 PM – Oct 01 01:13 PM

ஹர்ஷணம் – Oct 01 01:13 PM – Oct 02 10:28 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:07 PM

சந்திரௌதயம் – Oct 01 7:51 PM
சந்திராஸ்தமனம் – Oct 02 8:36 AM

அசுபமான காலம்

இராகு – 4:38 PM – 6:07 PM

எமகண்டம் – 12:09 PM – 1:39 PM

குளிகை – 3:08 PM – 4:38 PM

துரமுஹுர்த்தம் – 04:32 PM – 05:19 PM

தியாஜ்யம் – 04:38 AM – 06:10 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:45 AM – 12:33 PM

அமிர்த காலம் – 12:45 PM – 02:15 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

அனந்தம் Upto – 07:27 PM
காலதண்ட

ஞாயிறு ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தற்பெருமை பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : கவலைகள் நீங்கும்.

பரணி : அனுபவம் ஏற்படும்.

கார்த்திகை : புரிதல் உண்டாகும்.

ரிஷபம்

நினைத்த சில பணிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கார்த்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரோகிணி : நிதானம் வேண்டும்.

மிருகசீரிஷம் :ஆர்வமின்மையான நாள்.

மிதுனம்

குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய செயல்களில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அமைதியான நாள்.

திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.

புனர்பூசம் : நன்மையான நாள்.

கடகம்

சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உறவுகளின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ஆலோசனை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்பறிந்து செயல்படுவீர்கள்.

பூசம் : மரியாதை அதிகரிக்கும்.

ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கேற்ப சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : வாதங்கள் நீங்கும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : பொறுமை வேண்டும்.

கன்னி

மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. சிக்கலான சில சூழ்நிலைகளைச் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் கனிவு வேண்டும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். நேர்மை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்

உத்திரம் : சிக்கல்களைச் சமாளிப்பீர்கள்.

அஸ்தம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.

துலாம்

 

சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவுகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சார்ந்த புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : வரவுகள் கிடைக்கும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகப் பணிகளில் சில சிக்கல்கள் குறையும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திராடம் : இழுபறிகள் குறையும்.

திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.

கும்பம்

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். குழப்பம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம்: ஒத்துழைப்பான நாள்.

சதயம் : மாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : அனுகூலம் பிறக்கும்.

மீனம்

 

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு உண்டாகும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிலவர் நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.

மத்திய அரசு கல்வி நிறுத்தத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044- 29515942, மின்னஞ்சல் முகவரி [email protected] என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி பெறுவதற்கான கடன் உதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்கு ஏதுவாக வங்கிகள் மூலம் கல்வி கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மையம் துவங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

பரமக்குடி அரசு கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப்படிப்புகள் வகுப்புகள் 2023-2024-ம் நிதியாண்டிலிருந்து புதிதாக துவங்கப்படவுள்ளது.

பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பயில விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்துள்ள 18 முதல் 21 வயதுக்குள் (வயது வரம்பு தளர்வு 5 வருடம்) உள்ள செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 03.10.2023 அன்று பிற்பகல் 04.00 மணிக்குள் அரசு கலைக்கல்லூரி, பரமக்குடியில் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் ‘சைரன்’

Home Movie Makers சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் புதிய திரைப்படம் சைரன்.

பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்குறார்கள். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

கல்யாண முருங்கை இலையின் பயன்கள்

  1. கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.
  2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.
  3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
  4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
  5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.
  6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
  7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
  8. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.
  9. காமம் அதிகரிக்கும்.கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்