இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி அருகேயுள்ள கோவிலாங்குளம் பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
திமுக உறுப்பினர் தலைமையில்
இந்தப் பந்தயத்துக்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாட்டு வண்டிப்பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தப் பந்தயத்துக்கு14கி.மீ.எல்லை நிர்ணயிக்கப்பட்டு பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு ஆகிய 3 பிரிவுகளாக நடைபெற்றன.
தமிழகத்தில் முழுவதும் இருந்து வந்த மாடு வண்டி
இதில் இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 52 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
ஒவ்வோர் பிரிவிலும், வெற்றி பெற்ற முதல் 4 இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப்பந்தயத்தை வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
முன்னதாக, 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கமுதி மத்திய ஒன்றியச் செயலர் எஸ்.கே.சண்முகநாதன், வடக்கு ஒன்றியச்செயலர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.