முதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் லாபம் பெறலாம்
“டிஜிட்டல் மார்க்கெட்டிங்”
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு தேவையான SMS, Google Ads, Social Media Ads போன்ற சேவையில் செய்து தொழில் செய்பவர்களிடம் இருந்து லாபம் பெற முடியும்.
“இ-காமர்ஸ் வெப்சைட்”
இ-காமர்ஸ் வெப்சைட் என்பது பொருள்களை விற்பனை செய்யும் இணையம் ஆகும். வெப்சைட் மூலம் பொருள்களை விற்பனை செய்து சந்தையில் நல்ல லாபம் பெற முடியும். தெரிந்த நண்பர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இ-காமர்ஸ் வெப்சைட் மூலம் விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும்.
“டிராவல் வெப்சைட்”
உலகம் முழுவதும் உள்ள டிராவல் ஏஜென்ட் வெப்சைட்டுகளில் உறுப்பினராகி பாஸ், ட்ரெயின், பிளைட் ஆகியவற்றில் புக் செய்து கமிஷன் அடிப்படையில் நல்ல லாபம் பெறலாம்.
“மேன் பவர்”
இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், கடைகளுக்கு பணியாட்களை வேலைக்கு அமர்த்தி விட்டு கமிஷன் அடிப்படையில் நல்ல லாபம் பெற முடியும்.
“செய்தி சேவை”
ஒரு மாவட்டம் அல்லது ஒர் பெரிய நகரத்துக்கு மட்டும் செய்தி வழங்கும் இணைய சேவை ஆரம்பிக்கலாம். இதில் உள்ளூர் செய்தி, தகவல்கள் பதிவு செய்யலாம். இதில் உள்ளூர் விளம்பரம் மற்றும் கூகிள் விளம்பரம் மூலம் வருமானம் பெற முடியும். மேலும் ஒரு தகவலை நொடி பொழுதில் உலகம் முழுவதும் உங்களால் பரப்ப முடியும்.