கிட்னி பாதிக்கும்
சர்க்கரைக்கு மாற்று என கூறும் பொருட்களை சாப்பிடுவதால் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி விடும். இன்சுலின் என்பது பொதுவாக நமது உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இது நமது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சர்க்க ரைக்கு மாற்றான இனிப்பூட்டிகளை சாப்பிடும் போது அது இன்சுலின் சுரப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தி இன்சுலினை நமது உடலில் வேலை செய்ய விடாமல் செய்துவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோயினால் ஏற்படும் பிரச்னைகள் மிக அதிகமாகி விடும். இதனால் கண் பார்வை மற்றும் கிட்னி உடனடியாக பாதிக்கப்படும்.
அளவு மீறினால் நடவடிக்கை
அஸ்பர்டேம் எனும் பொருளை எவ்வளவு பயன்ப டுத்துவது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட் டுள்ளது. அந்த அளவைவிட கூடுதலாக பயன்ப டுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
உணவுப் பொருளை அழகுபடுத்துவதற்காக கலரும், சுவைக்காக சில பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே கெமிக்கல் தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு வீட்டில் கேசரி செய்தால் அது வெள்ளையாக இருந்தால் நிறைய பேருக்கு பிடிக்காது. இதனால் தேவையில்லாமல் நாம் அதில் ஒரு கேசரி பவுடரை கலந்து, அது ஆரஞ்சு நிறத்தில் வந்தவுடன் சாப்பிடுவோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இயற்கையாக கிடைக்கும் பொருளை விட்டுவிட்டு செயற்கை முறையில் நாம் ஒரு பொருளை கூடுதலாக அதனுடன் சேர்ப்பதால் தீங்கு வருகிறது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.
இதேபோன்று ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்துவார்கள் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும், என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தவிர்ப்பது நல்லது
அஸ்பர்டேம் எனப்படும் இனிப்பூட்டியை பயன்படுத்துவது குறித்து சென்னையைச் சேர்ந்த உணவு பொருட்கள் பரிசோதனை நிபுணர் கூறுகையில், “உணவுப் பொருட்களில் கூடுதலாக சேர்க்கப்படும் அனைத்து பொருட்களிலும் கெமிக்கல் கலந்துள்ளது. எனவே அதனை பொது மக்கள் தவிர்ப்பது நல்லது.
அனைத்து பொருட்களும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. ஆனால் பாதிப்புகள் வேறு ரூபத்தில் வரலாம். அஸ்பர்டேம் எனப்படும் பொருளை பயன்படுத்தக் கூடாது என இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் குறைவாக பயன்படுத்தும் படி தெரிவித்துள்ளனர். எனவே அதை பயன்படுத்துபவர்கள் அதை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால் நாங்கள் அதை தடுக்க முடியாது.
அங்கீகரிக்கப்படவில்லை
அஸ்பர்டேம் குறித்த வெளியிட்ட செய்திக்காக உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிக்கு சர்வதேச செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஹண்ட்வுட் கூறுகையில், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையான ஐ ஏஆர் சி உணவுப் பாதுகாப்பு அமைப்பு அல்ல. அஸ்பர்டேம் பற்றிய கருத்துகள் அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை.
அந்த ஆராய்ச்சிகள் ஏதும் உணவு பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐஏஆர்சி-யின் கருத்து வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்யும் என்ற குறிப்பிடுகின்றனர்.