Thursday, April 18, 2024
Homeதொழில் பழகுவோம்அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அட்டைப் பெட்டிகள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனவே அட்டைப்பெட்டி தொழில் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இடம் தேவை

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில் செய்ய 5000 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது.

மின்சாரம் தேவை

ஒரு நாளைக்கு அட்டைப் பெட்டி தயாரிக்க 50 ஹெச்.பி மின்சாரம் தேவைப்படும்.

மூலப் பொருட்கள் தேவை

கிராப்ட் பேப்பர் ரோல் என்ற மூலப்பொருள் அட்டைப் பெட்டி தயாரிக்க பயன்படுகிறது. இடத்திற்கு தகுந்தார் போல் பேப்பர் ரோலின் அட்டை தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் சந்தையில் கிடைக்கிறது. அட்டைப் பெட்டியின் அடர்த்தியை பொறுத்தே கனமும், உழைப்பும் இருக்கும். பின்னர் கம், Stitching Wire, Ink ஆகிய மூலப்பொருட்கள் தேவைப்படும்.

இயந்திரம்

இந்த Automatic Paper Carton Box Making Machine இயந்திரம் அவசியம் தேவைப்படும். இந்த இயந்திரம் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு இரண்டு வேலை ஆட்கள் தேவை.

20 லட்சம் வரை முதலீடு

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில் செய்ய குறைந்தது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு வங்கிகள் 20 லட்சம் வரை கடன் கொடுக்கிறது. இதேபோல் தமிழக அரசு மானியமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது.

சந்தை வாய்ப்பு

பேக்கிங் செய்யும் தொழிலை செய்பவர்களுக்கு அட்டை பெட்டி தேவைப்படுகிறது. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரத்தை மட்டுமே பார்ப்பார்கள் வாடிக்கையாளர்கள்.

20 சதவிகிதம் லாபம்

வாடிக்கையாளர்கள் எந்த அளவு, தடிமனில் பெட்டி தயார் செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாக செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களை விட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள். இதன் தேவை எப்பொழுது இருக்கு என்பதால் இந்த தொழிலை தயக்கம் இல்லாமல் செய்யலாம்.

 

இதையும் படியுங்கள் || தேங்காய் எண்ணெய்யின் 5 அற்புத பலன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments