Sunday, May 28, 2023
Homeசெய்திகள்பரமக்குடியில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு

பரமக்குடியில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு

பரமக்குடியில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கிய கமுதக்குடி பாலமுரளி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் பிரபாகரன், பார்வர்ட் பிளாக் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகநாதன், முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் சுனாமிசேதுபதி உட்பட 9 பேர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தீர்ப்பின் விவரம்:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி கடந்த அ.தி.மு.க ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, “சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌.”

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளழுடி செய்யப்பட்டுள்ளது.

உள்‌ ஒதுக்கீடு ரத்து

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, “சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழக அரசு மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஒட்டு மொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்து இருப்பதாக தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தது. அதேபோல், பாமக சார்பிலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பரமக்குடியில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கியவர்கள் மீது வழக்கு

எதிர்மனுதாரர் தரப்பு

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தில், ”வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் வன்னியர் சமுதாய மக்கள் பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது. அவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால், உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு;- வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கு அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. இதில் போதிய தரவுகள் இல்லை என்பதற்காக அதனை நிராகரிக்கக் கூடாது.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும். அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு

அதில், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உள் ஒதுக்கீடு வழங்கம்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

இதையும் படியுங்கள் || மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments