- முந்திரி பருப்பில் உள்ள அதிக மெக்னீசியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
- ரத்த அழுத்தம் சீராக இருக்கும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்
- தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது
- இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும்
- முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
- முந்திரி புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுள்ளது. நார்ச்சத்தானது நமது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் முந்திரியில் உள்ள சத்துக்கள் காரணமாக அது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நமக்கு பசி எடுப்பது குறைகிறது. எனவே இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் ஒரு விதை உணவாக முந்திரி உள்ளது.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது
- முந்திரி உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளே உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளன.
- மேலும் இவை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உடலில் ஏற்படுத்துகின்றன. முந்திரியை உண்பதன் மூலம் இவற்றைக் குறைக்க முடியும்.
- மேலும் முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளின் அளவை அதிகரிக்க முடியும்.
- உடம்பு எப்பவும் சோர்வாவே இருக்கா… இந்த 5 பானங்கள்ல ஒன்னு குடிங்க… உடனே சுறுசுறுப்பா துள்ளி குதிப்பீங்க…
இதயத்திற்கு நன்மை பயக்கிறது
- 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரிப் பருப்பை உண்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயமானது 37 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
- எனவே இதயம் பலவீனமாக இருப்பவர்கள் கூட முந்திரியைப் பயன்படுத்தலாம்.
செல் சேதத்தை தடுக்கிறது
- பொதுவாகவே நட்ஸ்கள் அனைத்தும் அதிகமாக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. அவை உடலில் சேதத்தை ஏற்படுத்தும் செல்களை தடுக்க உதவுகின்றன,
- மேலும் இவை உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு முந்திரி உதவுகிறது.
- பச்சையாக இருக்கும் முந்திரியை விட வறுத்த முந்திரியானது அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது
- முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் உணவாக முந்திரி உள்ளது.