ராமநாதபுரம் பரமக்குடியில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்
நம் வீடுகளை வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான மாடுகள் ஆடுகள் நாய்கள் மற்றும் கோழிகள் போன்ற வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனையான செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு முகாம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது
சிறப்பு முகாம் செல்லப் பிராணிகள் – தடுப்பூசி
இந்த முகாமிற்கு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரதாப் குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சிவக்குமார், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் நேரு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் உடன் இருந்தனர்
பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் கீதா லட்சுமி, ரகு, வினிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அழகுமீனாள், கீதா, செந்தில்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.