மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் 5வது நாளாக வீணாக கடலில் கலப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியதையடுத்து, மேட்டூர் அணைக்கு உபரி நீர் வந்தடைந்தது. அணை நிரம்பியதால் காவிரியில் திறக்கப்பட்ட மதகு வழியாக ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு வினாடிக்கு 74 ஆயிரத்து 225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இரவு 8:00 மணியளவில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 954 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 400 கனஅடியும், 4ம் தேதி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 73 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
5 நாட்களாக தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி கால்வாய் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு பகுதியில் வீணாக கடலில் கலக்கிறது. குறுவை சாகுபடிக்காக தண்ணீருக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்காததால் வருண பகவான் கொடுத்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வரும் காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தண்ணீர் வீணாகாமல் விவசாயம் செய்யும் வகையில், குமாரமங்கலம் அணையில் ரூ. மேலும் கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீ.,க்கு கதவணை அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.