Thursday, December 1, 2022
Homeசினிமாபொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டு படக்குழு கொண்டாட்டம்

பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டு படக்குழு கொண்டாட்டம்

பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டு படக்குழு கொண்டாட்டம்

வெற்றிமாறன் இயக்குநராக  இயங்கிய படம் “பொல்லாதவன்”. இதில் தனுஷ், அறிமுகமான முதல் படம் இதில் ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரித்த இப்படம் கடந்த 2007 நவ.8-ம் தேதி வெளியானது. இது வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை தனுஷ், வெற்றிமாறன், ரம்யா, தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட படக் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மறைந்த பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அது ஒரு கனாக்காலம்’ 2005ம் ஆண்டு வெளியானது. அப்போது பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட நட்பில் இருந்து தான், பொல்லாதவன் படம் உருவானது. ‘அது ஒரு கனாக்காலம்’ படப்பிடிப்பின் போதே தனுஷுக்கு கதை சொல்லிவிட்டார் வெற்றிமாறன்.இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை பொல்லாதவன் திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: