Saturday, December 2, 2023
Homeராமநாதபுரம்மீனவளத்துறை மண்டல அலுவலத்தில் மீன் வள தினம் கொண்டாட்டம்

மீனவளத்துறை மண்டல அலுவலத்தில் மீன் வள தினம் கொண்டாட்டம்

மீனவளத்துறை மண்டல அலுவலத்தில் மீன் வள தினம் கொண்டாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட மீனவளத்துறை மண்டல அலுவலத்தில் உலக மீன்வளத்தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,

கடல் பகுதியை தூய்மையாக பாதுகாத்திட விழிப்புணர்வு

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவ கிராமங்களில் கடற்கரை தூய்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் சிறந்த மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,   தலைமையேற்று உலக மீன்வளதினத்தையொட்டி மீனவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் உலக மீன்வள தினம்  கொண்டாடப்படும் நோக்கம் மீனவர்களின் நலனை பாதுகாப்பதே ஆகும் என தெரிவித்தார்.

மீனவர்களின் வாழ்க்கையில் அனுபவம் எனக்கும் உள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

மீனவர்களின் வாழ்க்கை மிக அருகாமையில் இருந்து பார்த்து அவர்களுடன் ஆலோசனை மற்றும் பல்வேறு பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்கள் மீன்வளத்துறையில் கூடுதல் இயக்குனராக 2 ஆண்டுகள் பணியாற்றியதில் எனக்கு உள்ளது.

அந்த வகையில் உலக மீன்வள தினத்தையொட்டி மீனவள கிராமங்களில் கடற்கரை தூய்மை பணி மேற்கொள்வது குறித்து  தூய்மை பகுதியாக பாதுகாத்திட வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய தினம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டது.ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மீன்வளத் துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. மீன் பிடிப்பு, மீன் வளர்ப்பு சார்ந்து தொழில்கள் எந்த அளவிற்கு கஷ்டம் என்பதை நன்கு அறிவேன். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மீனவர்கள் சரியான முறையில் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆலோசனை தற்போது விரைவாக திட்டங்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும். மக்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,   தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தொடர்ந்து 5 சிறந்த மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு கேடயமும், சிறந்த சுற்றுச்சூழல் அலுவலர், சிறந்த மீன்பிடி நிறுவனம், சிறந்த துறைமுக மேலாண்மைக்குழு, சிறந்த கடல் ஓடு கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சுய உதவிக்குழு, சிறப்பு கடல்வள பாதுகாவலர் ஆகியோருக்கு பாராட்டி கேடயம் வழங்கியதுடன் கடற்கரை தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் காத்தவராயன்  மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், ராஜதுரை மாணிக்கம், அப்துல்காதர் ஜெய்லானி, மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments