பரமக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இவர் நேற்று பொதுவக்குடியில் உள்ள வீட்டில் இருந்தபோது பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தண்ணீர் வேண்டும் என்று கூறி வீட்டுக்குள் வந்து தீபாவின் கழுத்தைப் பிடித்து கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுக்க முயற்சி செய்துள்ளார்.
தீபா கத்தவும் அருகிலிருந்த வண்டியை எடுத்து கிளம்ப முற்பட்டபோது அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தீபா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 19ஆம் தேதி எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் || வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்