இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளும் பணிகளை காலதாமதமின்றி முடித்திட வேண்டுமென தலைவர் அன்பழகன் அறிவுறுத்தினர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் புதிய கட்டடங்கள் என்பது அத்தியாசிய தேவையாகும். எனவே பொதுப்பணித்துறை கவனம் எடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை, வைகை வடிநிலக் கோட்டம், வருவாய்த்துறை, பள்ளிகல்வித்துறை, வணிகவரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் மூலம் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தை சீரமைக்க வடிவமைத்தனர்
மேலும் வைகை வடிநிலக் கோட்டம் மூலம் வைகை ஆற்றில் பிரதான கால்வாய்கள் மற்றும் கண்மாய்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட பணிகளை உரிய காலத்தில் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். பொதுப்பணித்துறையின் மூலம் புதிய கார்கட்டடப் பணிகளுக்கு அனுமதி பெற்றும் பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளதை, மேலும் காலம் கடத்தாமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதில் ஏற்படும் இடர்பாடுகளை கண்டறிந்து சரிசெய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன் ,சிந்தனை செல்வன் , சிவக்குமார் , இராமச்சந்திரன் ,பரந்தாமன் , காந்திராஜன் , ஜவாஹிருல்லா , மணியன் , அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு கூடுதல் செயலர் திரு.சுப்ரமணியன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.