Tuesday, October 3, 2023
Homeஆன்மிகம்சந்திராஷ்டமம் நன்மைகள் தீமைகள் 

சந்திராஷ்டமம் நன்மைகள் தீமைகள் 

மேஷம்

சந்திரன் எட்டில் நீச்சம் பெற்ற நிலையில் இருந்தால், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

ரிஷபம்

பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மிதுனம்

பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும், அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்களிடையே மிகுந்த நற்பெயர் கிடைக்கும்.

கடகம்

வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும்.

சிம்மம்

சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12-ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்கள், பொருளிழப்பும் தவிர்க்கப்படும்.

கன்னி

லாப, நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும்.

துலாம்

துலாம் ராசியை பொறுத்தவரை சந்திராஷ;டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

வீண் பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களை புரிந்து கொள்வர்‌. அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்ள முடியும்.

தனுசு

செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத் தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கை துணையின் பெயரில் சொத்துகள் சேரும்.

மகரம்

வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத் தொழிலில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டியினை சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும்.

கும்பம்

சந்திரஷ்டமத்தால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்துக்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழப்பார்கள். வழக்குகள் சாதகமான முடிவை தரும். கடன் சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும்.

மீனம்

பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும். கடன் சுமை குறையும், தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments