Tuesday, June 6, 2023
Homeஆன்மிகம்சந்திராஷ்டமம் சாதகம் - பாதகம் .

சந்திராஷ்டமம் சாதகம் – பாதகம் .

 

சந்திராஷ்டமம் சாதகம் – பாதகம்

எந்தெந்த ராசிக்கு என்ன வகையான சாதகம், பாதகம் என்பது பற்றி பார்ப்போம்.

மேஷம்                                    சந்திராஷ்டம நாட்களில் முக்கிய காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது. வழக்கமான காரியங்களை தாராளமாக செய்யலாம். புதிய பணிகளை செய்வது வாகனங்களில் தூர தேசங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

 

ரிஷபம்                                       ரிஷபத்தில் சந்திரன் உச்சம் என்பதால், சந்திராஷ்டமத்தைக் காரணம் காட்டி காரியங்களை தள்ளிப் போட தேவையில்லை. ரிஷபம் சுக்கிரனுடைய வீடாகவும் இருப்பதால், எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யலாம். எந்தத் தடையுமில்லை. ஆனால், கரும காரியங்களில் முழுமையாகப் பங்கேற்றல், கொள்ளிப் போடுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. சுபகாரியங்களில் தடையின்றிப் பங்கேற்கலாம்.

மிதுனம்                                              மிதுன ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் எல்லா வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக அவர்களின் ஜன்ம நட்சத்திரத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படலாம். எந்தவிதத் தடையுமில்லை. ரிஷப ராசிக்காரர்களுக்குச் சொன்னது போலவே, தீட்டுக் காரியங்கள், கரும காரியங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது. மற்றபடி எல்லா வேலைகளையும் செய்யலாம்.

கடகம்                                                        கடக ராசி சந்திரனுக்கு ஆட்சி வீடு. எந்த கிரகமும் தன்னுடைய ராசிக்காரர்களுக்கு உதவிகரமாகவே இருக்கும். எதிராகச் செயல்படாது. அதனால் எல்லா வேலைகளையும் செய்யலாம். ஆனால், நீண்ட நாள் வங்கியில் போட்டு வைத்திருந்த வைப்பு தொகையை கணக்கை முடித்து எடுத்தல், நகைகளை அடமானம் வைத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

சிம்மம்                                                    சிம்ம ராசியின் அதிபதி சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி, குளிர்ச்சியைத் தரும் கிரகம் சந்திரன். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் இந்த நாளில், ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளுதல், அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், குழந்தைகளின் படிப்புக்குச் செலவு செய்தல், வீட்டின் மேல்தளத்தை விரிவுபடுத்துதல் போன்றவற்றை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி.                                                கன்னி ராசிக்காரர்கள் தொழில் அபிவிருத்திக்குரிய காரியங்களை மட்டும் தடையின்றிச் செய்யலாம். மற்ற காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மிதுனத்துக்கும், கன்னிக்கும் அதிபதி புதன் என்றாலும், இடையில் வேறு கிரகங்கள் வருவதால் பலன்கள் மாறும்.

துலாம்                                                துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனும் சந்திரனும் நண்பர்கள் என்பதால் எல்லா விதமான காரியங்களையும் செய்யலாம். ஆனால், மனைவி குழந்தைகளின் நகைகளை மாற்றி புதிதாக வாங்குதல், பழுது நீக்குதல், அடமானம் வைத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. பிறருக்குக் கடன் கொடுப்பது, பிறரிடம் கடன் வாங்குவது ஆகியவற்றையும் செய்யக் கூடாது. வாகனப்பழுது பார்க்க வாகனங்களை விடக்கூடாது. மற்றபடி எல்லா காரியங்களையும் செய்யலாம்.

விருச்சிகம்                                விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்த வீட்டில் தான் சந்திரன் நீசமாகிறார். அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் அதிகம் சிரமத்தைத் தராது. அலைச்சல் திரிச்சலாக இருந்த வேலைகளை இந்த நாளில் செய்யலாம். கட்டட கான்ட்ராக்டரைப் பார்த்து வேலையை முடுக்கி விடுதல், வழக்கறிஞரைச் சந்தித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். முடியாமலிருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

தனுசு.                                                  தனுசு ராசிக்காரர்கள், குழந்தைகளை கல்விக்கான பயிற்சி வகுப்புகளில், இசை, நடன வகுப்புகளில் சேர்ப்பது போன்றவற்றைத் தள்ளிப்போடுவது நல்லது. அதே சமயம் கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றில் வீட்டிலிருந்த படியே பணிபுரியலாம். நல்லவிதமாகவே முடிந்து வெற்றியைத் தரும்.

மகரம்                                                      மகர ராசிக்கு அதிபதி சனி. பூர்வீகச் சொத்தில் பங்கு பிரியாமல் பங்காளித் தகராறில் இருந்த பிரச்னை, மனமுறிவு காரணமாக விவாகரத்து போன்ற பிரச்னைகள் சந்திராஷ்டம நாளில் வந்தால் அவை அன்றோடு முடிந்து போய்விடும். முடிவுறாமல் காலை சுத்திய பாம்பைப்போல் தொந்தரவு கொடுத்த பிரச்னைகளை இந்த மகரராசிக்காரர்கள் அணுகினால் அவர்களுக்கு அந்தப் பிரச்னை அத்துடன் தீர்ந்து போய் நிம்மதி கிடைக்கும். சனீஸ்வரர் இப்படியொரு பாக்கியத்தை மகர ராசிக்காரர்களுக்கு வழங்குகிறார்.

கும்பம்                                                    கும்ப ராசிக்காரர்கள், கோயில் திருப்பணி, ஹோமம், யாகம் வளர்த்தல், கோயிலின் கும்பாபிஷேகம், புனர் நிர்மாணம் ஆகியவற்றுக்கு நன்கொடை வசூலிக்கப் போனால், பெரிய அளவில் நிதி சேரும் . ஒரு மடங்கு கேட்டால், இரு மடங்கு கிடைக்கும்.

மீனம்                                                        மீன ராசிக்காரர்கள், சந்திராஷ்டம நாட்களில் எது செய்தாலும் தடங்கலே ஏற்படும். முன்னெச்சரிக்கை மிக்க  இவர்கள் பெரும்பாலும் சந்திராஷ்டம நாளில் எதுவும் செய்ய மாட்டார்கள். காரணம் இவர்கள் மனமும் அதற்கு ஒப்பாது. அதனால் இவர்கள் இயல்பாகவே சந்திராஷ்டம நாளில் எதையும் செய்யாமல் தள்ளிப் போட்டு விடுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments