இராமநாதபுரத்தில் தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் நடைபெற்றது. இராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த கூட்டத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார் அக்காள் மடம், சேதுபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் கலந்துரையாடினார்.