புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது.
அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரின்போது 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக்கால பட்ஜெட்) குறித்த மசோதாவினை சட்டசபையில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு 3 ஆயிரத்து 613 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாதது குறித்து அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடி நெசவாளர் சங்கங்களுக்கு “ரிபேட்” தொகை வழங்க லஞ்சம்