பள்ளிகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் பி.காயத்ரி, சைல்டுலைன் இயக்குநர் பூமிநாதன், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானலேட் சொர்ணகுமாரி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.