Friday, April 12, 2024
Homeஉடல்நலம் அறிவோம்நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்

ஜலதோஷம், தும்மல்

ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.

இரத்தக் கொதிப்பு

சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்னவெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும்.

உடையாத கட்டிகள்

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

ஆசனக்கடுப்பு

வெங்காய நெடி சிலதலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

இருமல்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

பல்வலி, ஈறுவலி

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயஞ்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments