ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் வரவேற்றார்.
வாக்குவாதம் தள்ளுமுள்ளு
ஆர்ப்பாட்டம் தொடங்கியதும், மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலர் ஆர்.ஜி.ஆர். மருதுபாண்டியன் பெயரை கூறியதும், அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். இதை முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர் சுரேஷ் கண்டித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரபரப்பு
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் சுரேஷை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிறகு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் காவல் நிலைத்திற்கு சென்று தனது ஆதரவாளரான சுரேஷை அழைத்து வந்தார். இந்த சம்பவம் அதிமுக வின் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.