Wednesday, October 4, 2023
Homeமருத்துவம்முடி உதிர்வை குறைக்கும் ‘வைட்டமின் ஈ’ யின் மருத்துவ குறிப்புக்கள்

முடி உதிர்வை குறைக்கும் ‘வைட்டமின் ஈ’ யின் மருத்துவ குறிப்புக்கள்

  • உடலுக்கு தேவையான சத்துகளில் முக்கியமானது வைட்டமின் ஈ இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
  • வைட்டமின் ஈ சத்து உட்கொள்வதால் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடலில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்கின்றன.
  • இது எளிதில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.
  • பொதுவாக சருமத்தில் ஏற்படுகின்ற தோல் சுருக்கம் ,வயதான தோற்றம், பொலிவிழந்த முகம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய வைட்டமின் ஈ உதவுகின்றன.
  • என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!! ஆனால் அதையும் தாண்டி உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை இது நமக்கு கொடுக்கிறது.
  • நம் உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்களை நம் தினமும் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் தொடங்கி
  • கடலை எண்ணெய் ,ஆலிவ் ஆயில்,என ஒவ்வொரு சத்துக்களும் ஒவ்வொரு எண்ணையில் அடங்கியுள்ளது.
  • இயற்கையான முறையில் காய்கறி ,பழங்களில் இருந்து வைட்டமின் ஈ சத்துக்களை உட்கொண்டாலும் சரி அல்லது
  • மருந்தகங்களில் கிடைக்கின்றன ஈவியன் Evion என்கின்ற வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்தினாலும் சரி இரண்டுமே நன்மை தரவல்லது.
  • அந்த வகையில் இப்பதிவில் நாம் வைட்டமின் ஈ சத்துக்களை சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம் .

கண்களை பாதுகாக்கும்

  • கண் சம்பந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுபவர்கள் வைட்டமின் ஈ நிறைந்த உணவை தினமும் சாப்பிடுவது நல்லது.
  • கண் பார்வை மங்குதல், பார்வை குறைபாடு, வயது முதிர்வு காரணமாக கண்களில் புரை வளர்வது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்
  • வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த உணவான பாலக்கீரை, பாதாம், வேர்க்கடலை, ப்ரோக்கோலி, கடுகுக் கீரை, சிவப்பு குடமிளகாய், பிஸ்தா போன்றவைகளில்
  • ஏதேனும் ஒன்றை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் கண் பிரச்சினைகள் குறைவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வைட்டமின் ஈ நிறைந்தஉணவுகளை சாப்பிட நேரம் இல்லாதவர்கள் மருந்தகங்களில் கிடைக்கும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் அடிக்கடி உண்டு வந்தால்
  • கண் பார்வை தெளிவாகும் மேலும் கண் சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுப்பதாகவும் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு சோர்வாக இருப்பார்கள்.
  • அவர்கள் இயற்கையான முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கண்டிப்பாக வைட்டமின் ஈ சத்துள்ள உணவை தினம் தோறும் உட்கொள்வது அவசியமாகிறது.
  • வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
  • இதனால் உடலில் தொற்று கிருமிகள் நம்மை தாக்காதவாறு எதிர்த்துப் போராடும் சக்தியை கொடுக்கிறது

தலைமுடி கருமையாக வளர

  • முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் விட்டமின் ஈ லாவண்டர் எண்ணையை தலைக்கு அப்ளை செய்வதன் மூலம் நல்ல பலனை காணலாம்.
  • வைட்டமின் ஈ லாவண்டர் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை கீழே கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்

  1. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் -2
  2. உலர்ந்த லாவண்டர் பூக்கள் – ஒரு கைப்பிடி
  3. தேங்காய் எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை

லாவண்டர் பூக்கள் இலைகள் நன்கு உலர்த்தி கண்ணாடி டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனுடன் சுத்தமான நாட்டு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையை கண்ணாடி டப்பாவில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதனுடன் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையில் உள்ள எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கண்ணாடி டப்பாவை ஒருவாரம் வரை இருட்டான இடத்தில் வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெய் வடிகட்டி வேறு ஒரு டப்பாவில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது லாவெண்டர் வைட்டமின் ஈ ஹேர் ஆயில் தயார்.

இந்த எண்ணெயை வாரத்தில் 2 அல்லது 3 முறை தலைமுடிகளில் மற்றும் முடியின் வேர் பகுதிகளில் மசாஜ் செய்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்

பிறகு உங்களுக்கு பிடித்தமான ஷாம்புவை கொண்டு தலையை அலசுங்கள்.

இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே உணரலாம்.

மேலும் சிலருக்கு நெற்றியில் வழுக்கை அதிகமாகிக்கொண்டே போகும் அவர்கள் இந்த குறிப்பு தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்

பசலை கீரை

வேர்க்கடலை

ஆலிவ் ஊறுகாய்

சூரிய காந்தி பூ விதை

சத்தான உளர் மூலிகைகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments