தென்னை நார் கயிறு தயாரிப்பு தொழில்
பிரான்மலை, வேங்கைப்பட்டி, சுக்காம்பட்டி, சேவல்பட்டி, கோபாலச் சேரி, கோயில்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தென்னை நார் கயிறு தயாரிப்பு தொழில் செய்து வருகின்றனர்.
இதற்கு தேவையான தென்னை நாரை சிங்கம்புணரி, பட்டுக்கோட்டை, அறந் தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இங்கு 2 பிரி முதல் 4 பிரி கயிறு 5 அடி முதல் 100 அடி நீலம் வரை தயாராகிறது. அதை நெற்கதிர் கட்டுவது முதல் கப்பல் கட்டுவது வரை பயன்படுத்துகின்றனர்.
மேலும் தேர் வடக்கயிறும் தயாரா கிறது. இங்கு தயாராகும் கயிறுகள் ஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
சிங்கம்புணரியில் 10 ஆண்டுகளுக்கு முன், 100-க்கும் மேற்பட்ட கயிறு தயாரிப்பு நிலையங்கள் இருந்தன.
பிளாஸ்டிக் கயிறு வருகை, ஏற்றுமதி அனுமதியால் தென்னை நார்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கயிறு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. இதனால் படிப்படியாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பாரம்பரியமாக குடிசைத் தொழிலாகச் செய்தவர்கள் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தினமும் 3 டன் அளவுக்கு கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சிங்கம்புணரி கயிறு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது: தேங்காய் மட்டையை ஆற்று ஓரங்களில் குழி வெட்டி தண்ணீரில் ஊற வைத்து தென்னை நார் எடுக்கப்படும்.
இவ்வாறு செய்வதால் தென்னை நார்கள் நீளமாகவும், தரமானதாகவும் இருக்கும். சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும். கயிறுகள் முறுக்குடனும், உறுதியுடனும் இருக்கும்.இதனால் இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கயிறுகள் ஏற்றுமதியன பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ் வொரு வீட்டின் முன்பும் கயிறு திரிக்கும் இயந்திரம் இருந்தது. தென்னை நார் விலை உயர்வு, பிளாஸ்டிக் கயிறு வருகை உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த ஆண்டு கரோனாவால் இத் தொழில் மேறும் பாதிக்கப்பட்டது. இருந் தாலும் இத்தொழிலை கைவிட மனமின்றி தொடர்ந்து செய்கிறோம். தேர் வடம் தயாரிக்கும் பணியில் ஒரே நேரத்தில் 10 முதல் 50 பேர் வரை ஈடுபடுவோம்.
தேர் வடம் தயாரிப்பில் பெரிதாக லாபம் இருக்காது. கயிறு தயாரிப்பு தொழி லை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.