நமது அன்றாட வாழ்வில் பயன்படுகின்ற உடலுக்கு நலம் தரும் தண்ணீர் குளிர்ந்த தண்ணீர், சுடு தண்ணீர் எது உடலுக்கு நன்மை
குளிர்ந்த நீர் – பயன்கள்
- காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பதால் மனித உடல் புத்துணர்ச்சி பெற்று அன்று முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
- குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் சோம்பல், தூக்க கலக்கம், மனச்சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது.
- உடலில் நோயை எதிர்த்து செயல்பட கூடிய ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் நுரையீரலில் செயல்பாட்டை சீராக வைக்கிறது. இதேபோல் ஆண்மையை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் தரமும் அதிகரிக்கிறது.
- இரவு தூங்கும் முன் குளித்து விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
சூடான நீர் – பயன்பாடுகள்
- சூடான நீரில் குளிப்பதால் உடல் சுத்தமாக வைக்கப்படுகிறது. இதேபோல் சூடான நீரின் வெப்பநிலை கிருமிகளை அழிக்க உதவுகிறது.
- சூடான நீரில் குளிப்பதால் உடலில் உள்ள சளி, இருமல், மூக்கு, தொண்டை அடைப்பு சரி செய்யப்படுகிறது.
- சூடான நீரில் குளித்தால் உடல் சோர்வு, மனச்சோர்வு, தசை பிடிப்பு போன்றவை பறந்து ஓடிவிடும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சூடான நீரில் குளித்து வந்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறைந்து வருவது ஆய்வில் தெரிய வருகிறது.
- அதேபோல் தினமும் சுமார் 20 நிமிடம் 30 நிமிடம் வரை சுடு நீரில் குளித்து வந்தால் 12 சதவீதம் வரை சர்க்கரை நோய் குறைகிறது.