Tuesday, June 6, 2023
Homeராமநாதபுரம்ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

இராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

தேங்கிய மழைநீர்

இந்த ஆய்வின்போது, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தங்கப்பா நகர், அரண்மனை வீதி, கோட்டை மேடு, நாகநாத தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை கண்டறிந்து நகராட்சி துறையினர் லாரிகள் மூலம் மோட்டார் வைத்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

தாழ்வான பகுதிகள்

மேலும் தொடர்ந்து மழை காலம் என்பதால் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் எங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அலுவலர்கள் தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் வடிகால் வாய்க்கால் சீரமைத்தும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மணல் அடித்து சீர் செய்ய வேண்டும்.

மழை நீர் தேக்கம்இதேபோல் மழை காலங்களை கருத்தில் கொண்டு கூடுதலாக லாரிகள், மோட்டார்கள், ஜெனரேட்டர் போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைத்து நகராட்சி பகுதியில் எந்த இடத்தில் மழை நீர் தேங்குவதை அறிந்து உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதன் மூலம் நோய் தொற்றுகள் உருவாக நேரிடும். அது மட்டும் இன்றி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சாலைகளில் செல்வதற்கும் சிரமங்கள் ஏற்படும். எனவே மழைநீர் தேங்காத வகையில் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டு என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி பொறியாளர் சுரேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments