பள்ளிக்கு வராத குழந்தைகளை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள. தேவாரம்பூரில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்க ஆட்சியர் சென்றிருந்தார்.
அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்று மாணவியரின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். அதில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்சியரிடம் தலைமை ஆசிரியர் சுமதி கூறுகையில், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றார்.8-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என்பதால், மாணவியின் குடும்பத்தாரிடம் பேசி மீண்டும் அவரை பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மாணவர்களின் வாசிப்புத்திறனை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றியத் தலைவர் சண்முக வடிவேலு, ஊராட்சித் தலைவர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.