ராமநாதபுரம் கடலாடி ஒன்றியம் உச்சிநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சிதினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. உச்சிநத்தம் ஊராட்சித் தலைவர் கணபதிபாமா முன்னிலை வைத்தார்.
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தலைமை வகித்து ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதன்கிழமைதோறும் கிராம் நிர்வாக அலுவலர் முகாமிட்டு பொதுமக்கள், விவசாயிகளின் குறைகளைத் தீர்த்து வைப்பார். ஊராட்சியில் உள்ள குளங்கள் சீரமைக்கப்படும். இப்பகுதியில் நூலகம், சுகாதார வளாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை மூலம் 15 பேருக்கு ரூ.4.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு மாததிற்க்காண மருந்து, மாத்திரைகளைக் கொண்ட தொகுப்பைகளையும் ஆட்சியர் வழங்கினார்.